Advertisement

Responsive Advertisement

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது ஒரு மாதத்திற்கு ஒத்திவைப்பு!!

 


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகளின்படி பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் சேர்க்கைக்கான வெட்டுப் புள்ளிகளைக் குறைக்கக் கோரி பாடசாலைகளைப் பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கம்' கோட்டை ரயில் நிலையம் முன் போராட்டம் நடத்தியது.

பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அணிவகுத்துச் சென்றனர், அங்கு போலீசாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டது.

இதனை அடுத்தே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments