முன்னாள் வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார் என கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்பொது அவர் கட்சியில் செயற்குழு உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் கொழும்பு எதுல் கோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் வைத்து குறித்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நியோமல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தில் வெளிவிவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பெயர் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: