மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் கனடா கல்வி மேம்பாட்டிக்கான அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வித்திறன்களை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கனடா கல்வி மேம்பாட்டிக்கான அமைப்புடன் இலங்கை சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் இணைந்து மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகபைகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவன அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவன தலைவர் கிரௌத்தர ஸ்டெனிலஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான கனடா கல்வி மேம்பாட்டிக்கான அமைப்பின் பொருளாளர் மரியதாஸ் சிராணி ராஜி , சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவன அங்கத்தவர்கள்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்.
0 comments: