Home » » தடையுத்தரவை மீறிய சாணக்கியன்! நீதிமன்றிலிருந்து வந்த அழைப்பாணை

தடையுத்தரவை மீறிய சாணக்கியன்! நீதிமன்றிலிருந்து வந்த அழைப்பாணை

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை இன்று செவ்வாய்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.


இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,

இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதாக தெரிவித்தே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே நான் எவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவினை மீறினேன் என எனக்கு தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |