நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் படு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மொனராகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மரண வீடு ஒன்றுக்காக சென்று கொண்டிருந்த போது, ரதல்ல குறுக்கு வீதியால் வந்த பஸ், முன்னே சென்ற பவுஸர் ஒன்றுடன் மோதி இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டே விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது.
குறித்த பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்த காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஸ்ஸின் பிறேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக பயணி ஒருவர் தெரிவித்தார். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments