Home » » பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலம் குறைக்கப்படுமா?- அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம்!!

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலம் குறைக்கப்படுமா?- அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம்!!


 (றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலத்தை ஆறு மாதங்களாக குறைத்து பயிற்சி நிறைவில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

2021.02.17 என திகதியிடப்பட்ட கடிதத்தில் இம்மாதம் முதலாம் திகதி சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிக் காலத்தை ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் ஒரு வருட பயிற்சியானது எவ்வித பயனுமற்ற பயிற்சியாகும். அவர்கள் நியமிக்கும் பயிற்சியில் பணியாற்றுவதுடன் பல்வேறு அரச நிறுவனங்களில் பல்வேறு பல்வேறு தரங்களில் அன்றாட பணித் தேவைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் அவர்களுடைய தொழில் கௌரவம் பாதிக்கப்படுகிறது. அவ்வாற சூழ்நிலை உருவாகாதிருப்பதற்கு பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் முன் பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் பயிற்சியானது போதுமானதாகும்.

இந்தப் பயிற்சிக்காலத்தில் உடல் மற்றும் உளரீதியாக பட்டதாரிகள் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் சிறந்த பொதுச் சேவையை வழங்குவதற்கு இது தடையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |