Advertisement

Responsive Advertisement

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் தரம்-6 இல் இணையும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



(செ.துஜியந்தன்) 

கல்முனை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாண்டிருப்ப மகா வித்தியாலயம் இவ் வருடம் அதன் 75 ஆவது ஆண்டில் காலதடம் பதிக்கின்றது. இதiனிட்டு பாடசாலையின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை விருத்தி செய்யும் வகையிலும், மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.





பாண்டிருப்பு மகா வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைபாடசாலைத் திட்டத்தில் உள் வாங்கப்பட்டதினால் இங்கு தரம்-6 இல் இருந்தே மாணவர்கள் கற்றலுக்காக உள்வாங்கப்பட்டுவருகின்றனர். 

இம்முறை தரம்-6 இல் இணையும் புதிய மாணவர்களின் தொகையை அதிகரிக்கும் வகையில் அங்கு புதிதாக இணைபவர்களுககு ஒரு வருடத்திற்கான கற்றல் உபகரணங்களையும், ஏனைய கல்விச் செயற்பாட்டிற்கான செலவினையும் தொடர்சியாக  இலவசமாக முன்னெடுப்பதற்கு அப் பாடசாலையில் 1994 இல் கல்வி கற்று வெறியேறிய பழைய மாணவர்கள் முன்வந்துள்ளனர்.

இதற்கமைய பாடசாலையில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதிபர் எஸ்.புனிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதியதிபர் .பாலசுப்பிரமணியம் உட்பட ஆசிரியர்கள், 94 ஆம் ஆண்டு பழையமாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

பழமைவாய்ந்த பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் கல்வி வளர்ச்சிக்கு அங்கு கல்வி கற்று வெறியேறி இன்று பல்வேறு பதவிகளில் இருக்கும் பலரும் இவ் 94 ஆம் ஆண்டு கல்வி கற்ற பழையமாணவர்களைப்போன்று உதவ முன்வருவதோடு அதிகளவிலான மாணவர்களை பாடசாலையில் இணைத்து கிராமத்தின் கல்விச் சொத்தான பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தினை அபிவிருத்தி செய்ய அனைவரம் ஒத்துழைப்ப வழங்கவேண்டும் என 94 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.

Post a Comment

0 Comments