மாளிகைக்காடு நிருபர்- நூருல் ஹுதா உமர்
குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் கல்முனை பிராந்திய அரச காரியாலயங்கள் மற்றும் மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர்வழங்கலும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மாளிகைக்காடு கமு/கமு/அல்-ஹுஸைன் வித்தியாலயத்திற்கு குடிநீர் தாங்கியும் நீர்வழங்களையும் உத்தியோகபூர்மாக கையளிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி திரு டேவிட், அல்-மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா, பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்திற்கும் இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வும் நிலைய பொறுப்பதிகாரி எம்.தி.எம். ஹாரூன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம் நிர்வாக அதிகாரி பீ. தியாகராஜா, பிரதம இலிகிதர் எம்.ஏ.சி.அத்திப் உட்பட விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொணடனர்.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தை அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மி பாடசாலை மாணவர்களினதும் பொதுமக்களினதும் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை அலுவலக நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.
0 Comments