Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத் தற்கொலை!!

 


மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குரிய வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணிபுரியும் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ள தனது மனைவியோடு, தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தனது இரு பெண் மக்களையும் (15, 12) தவிக்க விட்டு, தனது வீட்டினுள் நேற்றிரவு (19/01) தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

பிள்ளைகள் இருவரும் சித்தியின் பராமரிப்பில் இருந்ததால், தனது பிள்ளைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய தாய் "அப்பா தூக்கிடப்போவதாகக் கடிதமொன்றை எழுதி அனுப்பி விட்டு போனை துண்டித்து விட்டுவிட்டார்" வீட்டுக்குப் போய் பாருங்கள் என இன்று காலை பதற்றத்தோடு தெரிவித்ததும், உடனடியாகச் சென்று பார்த்த போது, வீட்டு வளையில் சாரியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கி மரணித்திருப்பதைக் கண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments