Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

 


அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

அதுதொடர்பான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமைக்கான பாதையை எளிதாக்கும் சட்ட மனுவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் 100 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் என பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதே நேரத்தில் முன்மொழியப்படும் மனுவானது, அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர் தேசமாக அங்கீகரிக்கும். அத்துடன், புலம்பெயர்ந்தோரை குறிப்பிடும் ‘அன்னியர்‘ என்ற வார்த்தை, ‘குடிமகன் அல்லாதோர்’ என்று மாற்றப்படும்.

புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள், பைடனின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments