செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2021ஆம் ஆண்டிற்கான புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
இங்கு பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன், தேசியகீதம் இசைக்கப்பட்டது. அத்துடன் நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய 2021 அம் ஆண்டில் கடமைகளை பொதுமக்களுக்காக நிறைவேற்றுவதாக அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட உறுதிமொழிக்கமைய சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கல்முனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள் பற்றியும், விழிப்புணர்வு நடவடிக்கைபற்றியும் விசேட உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments