Home » » மட்டக்களப்பில் ஒரு வருட பயிற்சியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த கொடுப்பனவுகள் வழங்க திட்டம்- அரசாங்க அதிபர்!!

மட்டக்களப்பில் ஒரு வருட பயிற்சியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த கொடுப்பனவுகள் வழங்க திட்டம்- அரசாங்க அதிபர்!!


கடந்த நல்லாட்சிக் காலத்தில் முதல் கட்டமாக வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் பெற்றவர்களில் 43 பட்டதாரி பயிலுனர்கள் கிழக்கு மாகாண சபை அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டிருந்தனர். 


இவர்களின் ஒருவருட பயிற்சியை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படாமை இருந்தது குறிப்பிடத்தக்கது
இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அரச அதிபரின் துரித செயற்பாட்டினாலும் முயற்சியினாலும் இப்பட்டதாரி பயிலுனர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த கொடுப்பனவினை வழங்குவதற்கு திறைசேரியின் அனுமதி மாகாண சபைக்கு வழங்கப்பட்டு இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 43 பட்டதாரி பயிலுனர்கள் மாகாண சபைக்கு இணைக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர்களுடைய கொடுப்பனவுகள் கிடைக்க இருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆக கருதப்படுகிறது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |