செ.துஜியந்தன்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும,; மகாசங்கங்களையும் கணனி மயப்படுத்தும் செயற்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடி முன்மாரி சமுர்த்தி வங்கியினை தன்னியக்க வங்கிச் சேவையாக அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு பிரதேச சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ் கலந்து கொண்டார். அத்துடன் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்; திருமதி அ.பாக்கியராசா, மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்காளர் எம்.எஸ்.பசீர், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக கணக்காளர் எம்.முகிலன், மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் எஸ்.மனோகிதராஜ், வங்கி பிரிவு முகாமையாளர்; நிர்மலா, முகாமைத்துவப் பணிப்பாளர்; வரதராஜன், தலைமை முகாமையாளர்; .குகப்பிரியன் உட்பட சமுர்த்தி நிலைய உத்தியோகத்தர்கள, பொதுமக்கள் எனப்பலர்; கலந்துகொண்டனர்
இதன்போது சமுர்த்தி பயனாளிகளுக்கு புதிய தன்னியக்க (online) சேவை வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளினால் வங்கி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டப்பட்டது. மேலும் அப்பிரதேசத்தில் சமுர்த்தி திணைக்களத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மலசலகூடம், வீடுகளும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments