Home » » பிரதி அதிபர் முருகேசு சுபைந்திரராஜா 30 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு

பிரதி அதிபர் முருகேசு சுபைந்திரராஜா 30 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு


செ.துஜியந்தன்


கல்முனை பாண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் மூன்றாவது புதல்வனாக 1960-12-30 இல் சுபைந்திரராஜா பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் கற்றுள்ளார்.
அதன் பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரி பட்டத்தினையும், தேசிய கல்வி நிறுவனத்தில் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். 


1990 இல் ஆசிரியராக சேவையில் இணைந்து கொண்டவர் முதன் முதலாக கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதனைத் தொடர்;ந்து கல்முனை கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். அங்கு ஆசிரியராக பணிபுரிந்த காலப்பகுதியில் 2006 இல் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதே கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.


2017 இல் இருந்து மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப்பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றினார். இதன்போது 2018 இல்; அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு பெற்றார். அங்கு 2017 இல் இருந்து பிரதி அதிபராக சேவையாற்றி வந்த நிலையில் தனது 30 வருட கல்விச் சேவையில் இருந்து கடந்த 2020-12-30 ஆம் திகதி முதல் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

ஓய்வு நிலையான பிரதி அதிபர் முருகேசு சுபைந்திரராஜா பல்வேறு சமய சமூக சேவைகளில் ஈடுபட்டுவருவதுடன் பல்வேறு பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதியாகவும் சிறந்த சமூக சேவையாளராகவும் செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |