Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பெரிய கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணத்தில் சந்தேகம் ! சிறுமியின் சித்தி கைது!

 


இந்த சிறுமி நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இது பற்றி ஆராய்ந்த  இந்த குழந்தையின் தாய் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டில் வீட்டு பணி பெண்ணாக வேலைசெய்து வருவதாகவும் இந்தச் சிறுமியை தனது தங்கையிடம் தான் வரும் மட்டும் பார்த்து கொள்ளுங்கள் என்று விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சிறுமியை நாளுக்கு நாள் சித்திரவதை செய்து வந்ததாகவும் உணவு கொடுக்காமல் அறையில்  பூட்டி வைப்பதாகவும்  அயல் வீடுகளில் உள்ளவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.


சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடம்பில் அடி காயங்கள் அதிக அளவில்  இருப்பதை கண்ட களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் அதிகாரி உடன் சிறுமியின் சித்தியை கைது செய்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எனவே யாரையும் நம்பி உங்கள் குழந்தைகளை யாரிடமும்  விட்டு செல்ல வேண்டாம்....

உங்கள் குழந்தைகளை உங்கள் பார்வையில் இருப்பது கவனம் செலுத்துவது போன்று இல்லை என்பது இந்த 11வயது சிறுமியின் கொலை நிருபித்து உள்ளது...

Post a Comment

0 Comments