Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி


 (பாறுக் ஷிஹான்)

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இன்று (4) 97 Rapid Antigen Test பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்குத் தேவையான பொருட்களை கல்முனையிலிருந்தே கொள்வனவு செய்வதால் கடை உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்பரிசோதனைகளின் முடிவாக 4 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நால்வரும் மத்திய முகாம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நால்வருடன் நாவிதன்வெளி, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ள COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

இந் நால்வரில் ஒருவர் கல்முனை, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments