இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மூயின் அலி இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவர் 10 நாள் தனிமைப்படுத்தப்படுகின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் என எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: