2021 ஆம் ஆண்டின் அரச ஊழியர்களின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, அம்பாறை மாவட்ட அரச திணைக்களங்கள், மற்றும் அரச நிறுவனங்களில் அரச சேவை உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புது வருடமொன்றின் ஆரம்பத்தைக் கொண்டாடும் இந்நிகழ்வையொட்டிய நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா தலைமைiயில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர், ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்நிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக்கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை கட்யெழுப்புவதற்காக சத்தியபிரமானமும் உறுதியுரையும் வழங்கப்பட்டது.
அலுவலக உத்தியோகத்தர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பொது மக்களின் தேவைகளுக்காக கடமை ஆற்ற வேண்டிய அவசியத்தை பிரதேச செயலாளர் வலியுறுத்தியதோடு வினைத்திறனுடனும், பற்றுறுதி வாய்ந்ததாக, உறுதியான எண்ணத்துடன் நேர்மையாக மக்களுக்கு சார்பாக சேவையாற்றுவதற்குமாக எம்மை தயாா்படுத்த வேண்டும் என்றாா்.
இந்நிகழவில் உதவி பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.பாரூக், கணக்காளர் ஐ.எம்.பாரீஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், ஏ.எல்.எம். அஸ்லம் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments: