எச்.எம்.எம்.பர்ஸான்)மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான பண வவுச்சர்கள் இன்று (12) வழங்கி வைக்கப்பட்டன.
AFD யின் நிதி உதவியுடன், EPPTA வின் அனுசரணையுடன் சொலிட ரிட லைக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இவ் வவுச்சர்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தில் வைத்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.சீ.கலீல் ரகுமான் (ECCD) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் ஆகியோர் கலந்து கொண்டு வவுச்சர்களை வழங்கி வைத்தனர்.
0 Comments