Home » » மற்றுமொரு அமைச்சருக்கும் கொரோனா தொற்றா? வெளியானது தகவல்

மற்றுமொரு அமைச்சருக்கும் கொரோனா தொற்றா? வெளியானது தகவல்

 


நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற தகவலை அவரது ஊடக செயலாளர் தெளிபுடுத்தியுள்ளார்.

இதன்படி வனஜீவராசிகள் அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு நிபுணரை மேற்கோள் காட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள Rapid Antigen பரிசோதனையின் மூலம் இவ்வாறு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இராஜாங்க அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவுகள் விரைவில் கிடைக்கும் எனவும், அவரது ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தற்போது 31 உறுப்பினர்கள் வரை தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |