Advertisement

Responsive Advertisement

கடவுளே மக்களைக் காப்பாற்று!


அகரம் செ.துஜியந்தன் (கவிதை)


கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமி
கதிகலங்க வைக்கிறது வையகத்தை
கண் கண்ட கடவுளே நீ எங்கே இருக்கிறாய்?!
கண்களால் எம் துயரை பாராயோ:

பூவுலகின் புன்னகையை சிதறடித்து
பூந்தளிர்கள் மொட்டுக்கள் பூக்கள் என்று
ஈவு இரக்கம் பாராதும் உயிர் பறிக்கிறது நுண் கிருமி
ஈரக்குலை நடுங்கி நெஞ்சுருகி நிற்கிறோம்
ஈடிணையில்லா ஈஸ்வரா எங்களுக்கு நல்வழி காட்டுங்கள்

நீதி நேர்மை தான தர்மங்கள் நிலை குலைந்து
அநீதி தலை விரித்து ஆடுகையில்
ஆண்டவனே ஓடி நீ வாருவாயாமே!
விரைவாய் வந்து கொரோனாவை அழித்துவிடு

ஏழை பணக்காரனென்ற வித்தியாசமின்றி
ஏணிப்படி தினமும் பதை பதைக்க வைக்கிறாய்:
எங்கள் ஆண்டவன் சந்நிதியில் அனைவரும்
ஒரே சமம் என்று நம்புகிறோம்
எல்லோரையும் காப்பாற்றி ஈடேற வை ஐயா!

மானிநிலத்தில் வேதனையில் உழல்கின்றோம்
மாந்தர் சிலர் விழிபிதுங்கி நிற்கிறார்கள்
மா பெரிய கடவுளே மன்றாடிக் கேட்கின்றோம்
மனித உயிர் கொன்றழிக்கும் கொரோனாவின்
கொடுரம்  ஒழிந்திட வேண்டுகிறோம்

மன்னுயிர் சீவன்கள் எல்லாம்
மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் ஐயா
கடவுளே கருணைக் கடலே மிகவிரைவில்
எங்களின் துன்பங்களை எல்லாம் தொலைத்திடுங்கள்
துயரங்களை எல்லாம் தீர்த்திடுங்கள்

Post a Comment

0 Comments