மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து நேற்று மாலை 6 மணிமுதல் விடுவிக்கபட்டுள்ளன.
இதன்படி 165 காத்தான்குடி 3 ஆம் பிரிவு, 165 ஏ காத்தான்குடி மேற்கு, 165 பி காத்தான்குடி கிழக்கு, 166 காத்தான்குடி இரண்டாம் பிரிவு, 166 ஏ காத்தான்குடி வடக்கு, 167 ஏ காத்தான்குடி வடக்கு, 167 பி காத்தான்குடி கிழக்கு, 167 டி புதிய காத்தான்குடி மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காத்தான்குடியில் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இன்று மருந்தகங்கள் மற்றும் ஒரு சில கடைகளும் வங்கிகளும் மாத்திரமே திறக்கப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக உள்ளதுடன் சன நடமாட்டமும் குறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பகுதியானது நேற்று 6 மணி தொடக்கம் ஒரு சில பகுதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: