Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தடுப்பூசி வழங்கும் அடிப்படை ஒத்திகை வெற்றிகரமாக பூர்த்தி!

 


கொரோனா வைரஸ் பரவலை தடுப்புக்காக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவந்ததும் அதனைப் பயன்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி வழங்குவது தொடர்பான அடிப்படை ஒத்திகை தற்போது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இந்நாட்டிற்கு கிடைக்கவுள்ள தடுப்பூசி தொகையில், முதலாவது கட்டம் கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு பங்களிக்கின்ற முன்னணி உறுப்பினர்களுக்கு இதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கின்ற இந்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியானது இந்தியாவின் தயாரிப்பாகும்.

இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ளது. முதலாவது கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

அத்துடன் இந்த தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமா கிடைக்கப் பெறுகின்றன என்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments