இலங்கையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் 2 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகள் 11 ஆம் வகுப்பு கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலேயே ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலைகளில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொறுப்பு பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments