கம்பஹா சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள மோருபொல பகுதியில் இரத்த தானம் வழங்கிய மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் கடந்த 03 ஆம் திகதி இரத்த தானம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து குறித்த இரத்த தானத்தின் போது பெறப்பட்ட இரத்தங்களை அகற்றுமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த மூவரின் குடும்பங்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினால் 100க்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
0 comments: