தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம் எட்டப்படுமென நம்புவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அரச நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் கதைத்திருக்கின்றேன்.
வடக்கு மாகாண ஆளுநர் என்ற ரீதியில் அப்போது இருந்த அதிகாரிகளிடம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளேன்.
மேலும், இந்த விடயத்தை முக்கியமானதாகக் கருதுமாறும், அது நல்லிணக்க நடைமுறையை பலப்படுத்தும் என்றும் தெளிவுப்படுத்தி இருந்தேன்.
இது தொடர்பாக நாம் ஒரு நல்ல முடிவை எட்டவிருந்த நேரத்தில்தான் கடந்த வருடம் ஈஸ்டர் தின தாக்குதல் நடந்தது. அதன் பின் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டியதாயிற்று.
எனினும், ஏதாவதொரு வகையில் தீர்வு விரைவில் வரும் என நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments