Home » » முக்கிய கல்விமான்கள் விரிவுரை நிகழ்த்தும் இலவச கருத்தரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பம் கோரப்படுகிறது.

முக்கிய கல்விமான்கள் விரிவுரை நிகழ்த்தும் இலவச கருத்தரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பம் கோரப்படுகிறது.

 


நூருல் ஹுதா உமர் -


சிம்ஸ் கேம்பஸ் ஒவ்வொரு வருடமும் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் மற்றும் தொழில் தேடுனர்கள், உயர்கல்விக்காக காத்திருப்போரின் நலன் கருதி சமூக நல திட்டத்தினுடாக நடத்தி வரும் தொழில்வழிகாட்டல் கல்விக்கருத்தரங்கை இம்முறையும் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 09 மணிமுதல் பகல் 12 மணிவரை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிம்ஸ் கேம்பஸ் தவிசாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்தார்.

இன்று (04) காலை அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

சர்வதேச நாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்கு இலங்கை தொழிநுட்பத்தை வளர்க்கவேண்டிய தேவைகள் இருப்பதனாலும் சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்றவாறு இலங்கை மாணவர்களை தயார் படுத்தவேண்டிய தேவையிருப்பதனாலும் வழமை போன்று சமூக நல திட்டத்தினுடாக நடத்தி வரும் தொழில் வழிகாட்டல் கல்விக்கருத்தரங்கை இம்முறையும் நடத்த உள்ளோம். கொரோனா தொற்று அபாயம் காரணமாக சுகாதார வழிமுறைகளை பேணி இணையத்தளமூடாக (ஆன்லைன்) இக்கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இம்முறை இந்த கருத்தரங்கில் வளவாளர்களாக கிழக்கு மாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பேரவை தவிசாளரும், சிம்ஸ் கேம்பஸ் தவிசாளருமான கலாநிதி அன்வர் முஸ்தபா ஆகிய நானும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியலாளருமான என்.டீ.எம். சிராஜுடீன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா, எய்ன்ஸா ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவன பிரதானி கலாநிதி அஜய் பிரசாத், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளிக்க உள்ளனர்.

முற்றிலும் இலவசமாக நடைபெற உள்ள இந்த கருதத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி அல்லது வாட்சப் இலக்கத்தை 0773590505 எனும் இலக்கத்திற்கு அல்லது info@cims.lk எனும் மின்னஞ்சலுக்கு எதிர்வரும் 10 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |