Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தனியார் கல்வி நிலையங்கள் எப்போது ஆரம்பம் -வெளியானது அறிவிப்பு

 


எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், தனியார் வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

உடனடியாக கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் தனியார் கல்வி நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்படும்.

மாணவர்கள் அல்லது ஆசிரியர்களிடையே எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரையும் உடனடியாக ஒரு சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments