Home » » கொரோனாவைக் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி - சிறையிலிருந்து வெளிவந்த ரிஷாட்டின் முன்னாள் கணக்காளர்

கொரோனாவைக் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி - சிறையிலிருந்து வெளிவந்த ரிஷாட்டின் முன்னாள் கணக்காளர்

 


அரச சொத்தினைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்த 3ஆம் சந்தேக நபரான அழகரட்ணம் மனோரஞ்சன் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் நேற்றய தினம் குறித்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்தில் இருந்து 222 பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிப்பதற்காக போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தமை தொடர்பில் 9.5 மில்லியன் பெறுமதியான அரச சொத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வழக்கின் முதலாவது பிணைமனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுசொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுதலை செய்ய விசேட காரணியாக மருத்துவ அறிக்கைகள் இல்லாத காரணத்தினால் கடந்த 27.10.2020 அன்று பிணைமனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பிணை வழங்கப்பட்டது.

இவ்வழக்கின் மூன்றாம் சந்தேக நபரான அழகரட்ணம் மனோரஞ்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவினால் மீண்டும் பிணைமனு தாக்கல் செய்யப்பட்டது. இம் பிணைமனு மீதான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கொரோனா தாக்கம் அதிகரித்தமையையும் கொரோனா காரணமாக மகசின் சிறைச்சாலையில் மரணம் ஏற்பட்டுள்ளதனையும் தனது வாதத்தில் முன்வைத்தார்.

மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோன தாக்கத்தினை பிணை வழங்குவதற்கு விசேட காரணியாக கருத்தில் கொண்டு 3ஆம் சந்தேக நபரான அழகரட்ணம் மனேரஞ்சனை பிணையில் விடுதலை செய்யம்படி முன்வைக்கப்பட்ட வாதத்தினை கருத்தில் கொண்டு 3ஆம் சந்தேக நபர்அழகரட்ணம் மனோரஞ்சன் கோட்டை நீதவான் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |