Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு கொரோனா நடவடிக்கைக்கு பொறுப்பாக மேஜர் ஜெனரல் சீ.டி. ரணசிங்ஹ நியமனம்



ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு கொரோனா நடவடிக்கைக்கு பொறுப்பாக மேஜர் ஜெனரல் சீ.டி. ரணசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ‪வின் ஆலோசணைக்கு அமைவாக 25 மாவட்டங்களின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் மட்டக்களப்பிற்குப் பொறுப்பாக ரணசிங்ஹ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சீ.டி. ரணசிங்ஹ மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனை சந்தித்து கலந்துரையாடினார்.

மாவட்டத்தின் கொரோனா வைரஸ் தொடர்பான விவரங்களையும் மக்களின் பாதிப்புக்கள் அது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முன் ஏற்பாடுகள் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பலும் அதிகாரிகள் மட்ட சந்திப்பில் ஆராயப்பட்டது.

Post a Comment

0 Comments