மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மாவட்ட கொரோனா செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
விசேடமாக கடந்த வாரம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக 25 மாவட்டங்களுக்கும் கொரோனா செயலணிக்காக 25 இரானுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேஜர் ஜெனரல் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் படி 59 தெற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மேலும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணியின் ஆலோசனையின் படி 15ஆம் திகதி வரை முடக்க வேண்டியது கட்டாயம் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் மட்டக்களப்பு நகரத்தின் அதிகளவான வர்த்தக நிலையங்கள் காத்தான்குடி முடக்கப்பட்ட பிரதேசங்களை சார்ந்தவர்களுடையதாகும் என்பதால் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாது வெறிச்சோடி காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 Comments