Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.!!


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹூப் ஹக்கீம் தனக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தன்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் இதுவரை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments