மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளைய தினம் (11) திறக்கப்படவுள்ளது.
அதன்படி, தரம் 02 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களுக்கு கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
0 comments: