Advertisement

Responsive Advertisement

அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு!

 


பாடசாலைகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பாடநூல்களை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகம் செய்யுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.


பல பாடசாலைகள் இன்னமும் பாடநூல்களை விநியோகிக்கவில்லை என்று கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்களை அடுத்து கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அடுத்த வருடத்திற்கான பாடநூல்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என்.அய்லப்பெரும தெரிவித்துள்ளார்.

ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கோட்டத்திற்கு அல்லது வலயத்திற்கு அல்லது 0112784815 பெக்ஸ் இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, முதல் இரு வாரங்களுக்கு மீட்டல் செய்யுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தப்பட்டதை அடுத்து பல அதிபர்கள் பாடநூல்களை விநியோகிக்காது இருந்துள்ளதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும் பாடநூல்களை விநியோகிக்காது இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments