Home » » கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்!!

கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்!!


 (சர்ஜுன் லாபீர்)

எமது பகுதியில் தீவிரமாக பரவி வரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் முகமாக எமது ஊரின் சகல பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உலமாக்கள், மக்கள் பிரதிநிதிகள், வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் நிறுவணங்களின் பிரதிநிதிகள் , சுகாதாரத் துறையின் பிரதிநிதிகள், கல்விமாண்கள், முக்கியஸ்த்தர்கள் ஒன்றிணைந்து கல்முனை கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி அமைக்கப்பட்டுள்ளது .

இச்செயலணியினால் இன்று 02.01.2021 சனிக்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .

01)கல்முனை செயிலான் வீதி தொடக்கம் சாஹிறா கல்லூரி வீதி வரையிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் தினமும் மறு அறிவித்தல் வரை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடப்படல் வேண்டும் .

02) இப்பிரதேசத்தில் தினமும் மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படுகின்றது . அவசர வைத்தியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவர அனுமதிக்கப்படுவார்கள் .

03) இப்பிரதேசத்தில் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் வைத்தியசாலைகளும் பாமஸிகளும் மட்டுமே திறக்கப்பட அனுமதியளிக்கப்படும் .

04. எல்லா நேரங்களிலும் சுகாதாரத் துறையினரினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும் .

05. இவ்வறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் பங்களிப்புடன் உடனடியாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

06. மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் மூடப்பட்டிருக்கும் செயிலான் வீதி வரையிலான பகுதிகளை விரைவாக மீட்பதற்காகவும் , ஏனைய பகுதிகள் லொக் டவுன் செய்யப்படாமல் பாதுகாப்பதற்காகவுமே என்பதனால் இந்த அவசர நடவடிக்கைகளுக்கு பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். என பொதுமக்களிடம் கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |