எச்.எம்.எம்.பர்ஸான்)பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைக்கும் பொருட்டு பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15) வெள்ளிக்கிழமை வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 44 பேரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 51 பேரும், அடங்கலாக 95 பட்டதாரி பயிலுனர்கள் பயிற்சிக்காக பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மெளலானா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.ரீ.அஜ்மீர், எம்.ஜே.எப்.றிப்கா, கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான எம்.பீ.டி,கான்,எம்.பீ.எம்.சித்தீக் ஆகியோர்கள் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
0 Comments