Advertisement

Responsive Advertisement

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51594ஆக அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 695 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 680 பேருக்கும், சிறைக்கைதிகள் 03 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 822 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, தொற்றில் இருந்து மேலும் 512 பேர் குணமடைந்து நேற்று வீடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 ஆயிரத்து 709 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொரோனா நிமோனியா தாக்கம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 60 வயதான ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 78 வயதான ஆணொருவரே கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கொரோனா நிமோனியா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன். கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கடந்த 13 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், கொரோனா தொற்ரே அவர் உயிரிழப்பதற்கு காரணமென சுகாதார துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments