செ.துஜியந்தன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2020 இற்கான தமிழ் இலக்கிய விழாவில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று(15) கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டார். அத்துடன் கலாசார உத்தியோகத்தர்களான ரி.பிரபாகரன், சிவஜோதி உட்பட கலாசார திணைக்களத்தின் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் தமிழ் இலக்கிய விழாவினை மிகவும் சிறப்பாக நடத்திவருகின்றது. இதில் மாகாணத்தில் கலைப்பணி ஆற்றிக்கொண்டிருக்கும் பலர் வித்தகர் விருது, இளங்கலைஞர் விருது ஆகியவை வழங்கி கொளரவிக்கப்பட்டுவருகின்றனர். அத்துடன் சிறந்த நூலுக்கான பரிசுகள், அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகள், சிறந்த குறுந்திபை;படங்களுக்கான பரிசுகள் போன்றவையும் வழங்கி கௌரவிக்கப்பட்டுவருகின்றன.
இம்முறை கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக மாகாண தமிழ் இலக்கிய விழாவினை சிறப்பாக நடத்தமுடியாது போய்விட்டது. இதனையடுத்து விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மாவட்ட மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் வித்தகர் விருது, இளங்கலை ஞர் விருது, படைப்பாக போட்டிகள் மறறும் சிறந்த குறுந்திரைப்படங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கொரோனா சுகாதாரவிதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.
0 Comments