பிரித்தானியாவின் தினசரி கொரோனா தொற்றில் முதன் முறையாக 60,000 க்கு மேலான தொற்றாளர்கள் பதிவான நிலையில் இங்கிலாந்து பிராந்தியத்தில் 50 வீடுகளில் ஒரு வீட்டில் தொற்று ஏற்படக்கூடிய அபாயத்துடனும் லண்டனில் 30 பேரில் ஒருவருக்கு தொற்றை உருவாக்கும் வகையிலும புதிய திரிபு கொரோனா வீரியம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இன்று ஒன்பதாவது நாளாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரித்தானியா தற்போது முழு முடக்க நிலையில் உள்ளது.
இந்த முடக்கநிலையை சட்டப்படி எதிர்வரும் மார்ச்மாதம் இறுதியில் நடைமுறைப்படுத்துவதற்குரிய புதியசட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் இந்த முடக்க நிலையை ஆதரித்துள்ளது.
தற்போது இங்கிலாந்து பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும், வெளியில் உடற்பயிற்சி செய்வது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே எதிர்வரும் கோடைகாலத்தில் இடம்பெறவுள்ள கபொத சாதாரண மற்றும் உயர்தர இறுதி பரீட்சைகள் மீளெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய கல்வியமைச்சர் கெவின் வில்லியம்சன் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கடந்த வருடத்தைப்போலவே கபொத சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மதிப்பீட்டுத் தரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments