இவ்வாண்டுக்கான முதலாம் தவணைக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று(6) மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிருபத்திற்கு அமைய 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு காயன்குடா கண்ணகி வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வித்தியாலய அதிபர் வி.எஸ்.ஜெகநாதன் தலைமையில் நேற்று(6) பாடசாலையில் நடைபெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையினை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கும், பாடசாலையின் கற்றல் நடவடிக்கைள், மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் போன்ற விடயங்களை தெளிவு படுத்தும் வகையில் வித்தியாலய ஆசிரியர்களின் ஏற்பாட்டில் வித்தியாலய அதிபர் வி.எஸ். ஜெகநாதன் தலைமையில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று(6) நடைபெற்றது .
இக்கூட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments: