வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட நகர கோட்ட பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.வவுனியா நகரைச் சேர்ந்த 2000 பேரினது பிசிஆர் முடிவுகள் வரும் வரைக்கும் வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்து அதற்கு உட்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை கருத்திற்கொண்டு வவுனியா நகர கோட்டத்திற்கு உட்பட்ட 42 பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களைகொண்டு நாடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இயங்கும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசியரியர்கள் கடமைக்கு செல்ல தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments