( வி.ரி.சகாதேவராஜா.)கல்முனை சுகாதாரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து அங்குள்ள மூன்று பாடசாலைகள் இன்று(29) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஒரு வாரகாலத்திற்கு மூடப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கேற்ப காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி சண்முகா மகா வித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளே இவ்விதம் மூடப்பட்டுள்ளன என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
இதுவரை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஜந்து மாணவர்களும் இ.கி.மி.பெண்கள் பாடசாலை மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் தலா ஒரு மாணவரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். முன்னெச்சரிக்கையாகவே இவ்விதம் பாடசாலை மூடப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த வெள்ளியன்று காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் இரு மாணவர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நடாத்திய பி சிஆர் சோதனைகள் இவ்விதம் இதுவரை ஏழு மாணவர்கள் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 69 பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments