கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்படி, கல்முனை தெற்கில் 19 பேருக்கும், சாய்ந்தமருதில் 4 பேருக்கும், மட்டக்களப்பில் 6 பேருக்கும், காத்தன்குடியில் 3 பேருக்கும், வெல்லாவெளியில் 3 பேருக்கும், அம்பாறையில் 2 பேருக்கும், தமனவில் 2 பேருக்கும், கிண்ணியாவில் 8 பேருக்குமாக மொத்தம் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் 413 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 1087 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 234 பேருக்குமாக கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1734 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
0 Comments