Advertisement

Responsive Advertisement

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி -கோட்டாபய அரசின் திட்டம் வெளியானது

 


நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது குறித்து கோட்டாபய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான யோசனையை தான் நாடாளுமன்றில் முன் வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடனேயே இந்த திட்டத்தை அமுல்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகில் உள்ள சில நாடுகள் இவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments