கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09ஆக அதிகரித்துள்ளது.
அம்பாறை உகண சுகாதாரப்பிரிவைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த நோயாளி சிறுநீரக குருதி மாற்று நோயாளியெனவும் இவரது சடலம் தற்போது கோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை இன்று மட்டும் உகண பிரதேசத்தில் ஏழு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இதுவரை உகணப்பிரதேசத்தில் 25பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, கிழக்கில் மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
0 comments: