Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனை

 



மட்டக்களபில் இன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமையாற்றுகின்ற 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண் உயிரியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் வைதேகி ரஜீவன் பிரான்சிஸ் மற்றும் வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

ரபிட் அன்டிஜன் பரிசோதனை மூலம் 100 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments