Home »
எமது பகுதிச் செய்திகள்
» O/L பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைப்பு- கல்வி அமைச்சு...!!
O/L பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைப்பு- கல்வி அமைச்சு...!!
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையானது எதிர்வரும் ஆண்டு (2021) பங்குனி(மார்ச்) மாதம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக 2020ஆண்டு மார்கழி (டிசம்பர்) மாதம் நடைபெற வேண்டிய சாதாரண தரப் பரீட்சையானது அடுத்த வருடம் தை(ஜனவரி) மாதம் 18ஆம் திகதி முதல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் தொடர்ந்து காணப்படுவதாலும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் மாணவர்களின் நலன் கருதி அடுத்த வருடம்(2021) பங்குனி (மார்ச்) மாதம் நடாத்த தட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடைபெற்று முடிந்த கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறானது அடுத்த வருடம் (2021) பங்குனி (மார்ச்) மாதம் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: