Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பதினைந்து வயதுச் சிறுவனைப் பலியெடுத்த கொரோனா!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கொவிட் தொற்றுடன் நியுமோனியா அதிகரித்த காரணத்தால் உயிரிந்துள்ளார்.

மேலும், கொழும்பு 7 பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுடன் நியுமோனியா ஏற்பட்ட காரணத்தால் அவர் மரணித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments