Home » » அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக வழங்குமாறு அரசாங்கத்தை வலியுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்..!!

அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக வழங்குமாறு அரசாங்கத்தை வலியுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்..!!

 


அனைத்து மாணவர்களுக்கும் இணைய கல்வியை இலவசமாக பெற்றுக்கொடுக்க வேண்டுமென, அரசாங்கத்தை வலியுறுத்தி, மக்கள் விடுதலை முன்னணியினர் திருகோணமலை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.


மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில், இன்று (18.12.2020) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் கல்விக்காக இலத்திரனியல் ஊடகங்களில் வழங்கப்படும் சந்தர்ப்பங்களை அதிகரிக்க வேண்டும், அனைத்து மாணவர்களுக்கும் இணையக்கல்வியினை இலவசமாய் பெற்றுக் கொடுக்க வேண்டும், பிள்ளைகளின் கல்வி முடக்கம் உடனே தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு சமூக இடைவெளியைப்பேணி பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா, இலங்கையில் கல்விக்காக 6 வீதம் மொத்த தேசிய உற்பத்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிலைமை இன்னும் மோசமாக விரிவடைந்திருக்கிறது. காரணம் கொரோனா தொற்று நோயின் பின்னர் பாடசாலைகள் முடக்கப்பட்டு இருப்பதன் காரணமாகவும் சில இடங்களில் இணைய வசதிகள் இல்லாமையினாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அனைவருக்கும் இலவசமாக இணைய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |