Advertisement

Responsive Advertisement

கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரி மாணவியொருவருக்கு கொரோனா

 


வி.ரி. சகாதேவராஜா) 

பாடசாலை மாணவியொருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கல்முனை உவெஸ்லி உயர்தரக்கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் நற்பிட்டிமுனையைச்சேர்ந்த மாணவியொருவரே இவ்விதம் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அண்மையில் அக்கரைப்பற்றில் பணியாற்றும் நற்பிட்டிமுனையைச்சேர்ந்த ஒரு அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததே. அவரது மகள்தான் தற்போது தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செ.புவனேந்திரன் உவெஸ்லி அதிபர் செ.கலையரசன் ஆகியோர் மாணவியின் தொற்றை உறுதிப்படுத்தினர். சுகாதாரத்துறையினரின் ஆலோசனையைப்பெற்று பாடசாலை நடாத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறினார்கள்.
இதேவேளை ஆயிரம் மாணவர் படிக்கும் உவெஸ்லி பாடசாலைக்கு நேற்று ஆக 36 மாணவர்களே வருகைதந்ததாக அதிபர் தெரிவிக்கிறார். அதுவும் தரம் 11 பரீட்சைக்கு 138 மாணவர்களுக்கு ஆக 36 மாணவர்கள் வருகைதந்துள்ளனர். இதேவேளை அருகிலுள்ள பற்றிமா தேசிய கல்லூரிக்கு கடந்த சில தினங்களாக எந்த மாணவரும் பாடசாலைக்கு வரவில்லையெனத் தெரியவருகிறது. இவ்விதம் பல பாடசாகைள் வெறிச்சோடிக்காணப்படுகின்றன.

Post a Comment

0 Comments